பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXVIII சித்தர்கள் பூசாவிதிகள்

சலத்தில் வைத்த அமிர்தத்தை இருசுவப் பிராசாத மந்திரமாகிய "அக அம்” என்பதை உச்சரித்து அங்குச முத்திரையால் எடுத்துப் புருவ நடுவில் ஒடுக்குதலே தீர்த்தோப சங்காரமாம்.

இனி, இருதைய மந்திரத்தால் எடுத்துப் புருவ நடுவில் ஒடுக்குக என்பர் ஒருசாரார். -

சூரியோபஸ்தான்ம் கை நிறையச் சலமெடுத்துப் பிடித்துக் கொண்டு சங்கிதா மந்திரம் பதினொன்றும் உச்சரித்து உற்பவ முத்திரையினாலே சூரிய மண்டல மத்தியில் விளங்கும் சதாசிவமூர்த்தியைத்தியானித்துஅம்மூர்த்தியினிடத்திலே மூல மந்திரத்தை உச்சரித்து அந்தக் கர்ம பலத்தைக் கொடுத்தலே சூரியோபஸ்தான்ம் ஆகும்.

பின்பு சுகாசனமாக இருந்து பிராணாயாமம் சகளிகரணம் செய்து மூலமந்திரத்தைச் செபமாலையா லாயினும், இல்லாதவர் வலக்கைப் பெருவிரல் நுனியால் அணிவிரல் நடுவிறை முதற்கொண்டு பெருவிரல் அடிவரையிலும்பத்துரு இருபத்தைந்துரு.ஐம்பதுருநூறுரு இவற்றுள் இயன்ற மட்டும் ஏகாக்கிர சித்தனாக இருந்து வாய்திறந்து நாவால் பல்அடிபடாமல் அந்தக் கரணம் வழுவாமல் செபித்துப்பிரணாயாமம் சகளிகரணம் பண்ணி அட்டதிக்குப் பாலரை அவ் அத்திசை நோக்கி நமாந்தமாக அவ்வவர் நாமமூல மந்திரங்களினாலே வந்தனஞ்செய்து தோத்திரம் பண்ணி 'ஓம் பார்வதி பரமேசுவராய நம: என வடக்கு நோக்கிநமஸ்காரஞ் செய்து எழுக. -