பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XXIX

அநுட்டானம்-சூரியன் உதிக்கும்முன்பு:நட்சத்திரம் காணவும், மாலையிலே நட்சத்திரம் காணும் முன்னும் பண்ணுக, இக் காலம் தப்பிச் செய்தால் சங்கிதாமந்திரம் ஒருமுறை செபிக்க. - -

காலையில் சரஸ்வதியை இருதையத்திலும், மத்தியானத்தில் இலட்சுமியைப் புருவநடுவிலும், மாலையில் ரெளத்திரியைத் துவாத சாந்தமாகிய சிரசு உச்சியிலும் வைத்துத் தியானிக்க. -

சைவ அநுட்டானவிதி முற்றிற்று.

நன்றி:திருவாவடுதுறை ஆதீனம்