பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 9

பண்ணப்பா ஒராண்டு செய்தாயானால்

பராபரமே உனக்குவந்து ஏவல்செய்யும் விண்ணப்பாஒருவருக்கும் நீசொல்லாதே

மேதினியில் நரகத்துள் கிடந்து மாள்வாய் கண்ணப்பா உனக் கேத்த பிள்ளையானால்

கைமுறையாய்ச்செய்து அவன் குணத்தைப் பாரு ஒண்ணப்பாகருவைத்தான்் ஒளிக்கவில்லை

உற்றுணர்ந்து மனந்தேறிப் பாரு பாரே. 6

பாரப்பாஇதுக்குக் கைலாசம் உண்டாம்

பாடாமற் சித்தரிதை மறைத்துப்போட்டார் ஆரப்பாஎனைப்போலே திறந்து சொல்வார்

ஆச்சரியம் இதுனுடை வேகமப்பா ஊரப்பாஇதினாலே யோக சித்தி

உத்தமனே சிவபூசைபண்ண நன்று காரப்பாஇதுதனக்குப் பூசை செய்து

கருவாக அர்ச்சனைசெய் பதங்கம் செய்யே. 7

செய்யப்பாஇப்படியே பூசை கொண்டு -

திறமாகச் செய்யவல்லோ பலத்தைக் கேளு மெய்யப்பா அவனுடைய பிதிர்களெல்லாம்

மிகக்கோடி நரகசென்மம் அல்ல அல்ல பொய்யப்பா சொல்லவில்லை தேர்ந்து பாரு

புலத்தியனேஉன்தனுக்குக் கருவைச்சொன்னேன் வைப்பாபூசையிலே என்னை வைத்து -

மவுனமாய் சிவனை வைத்து நோக்கு நீயே. &