பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2– கணபதிதுணை

உரோமரிஷி திருவாய் மலர்ந்தருளிய பூசா விதி 7

ஆதியென்ற வாலைமனோமணியைப்போற்றி

அருள்நிறைந்த பூசைவிதி ஆறும் சொல்வேன் சாதியென்ற சரசுபதியாள் பாதங்காப்பு

சச்சிதான்ந்தமென்றதாயே காப்பு சோதியென்ற சுடரொளியின் சூட்சங் காப்பு

சொரூபமணி வேதாந்தம் அருளே காப்பு பாதிமதி அணிந்தருளும் பரமே காப்பு

பரமசிவ செகசோதி பாதங் காப்பே. காப்பான கருவூர் போகநாதர் -

கருணையுள்ள அகத்தீசர்சட்டை நாதர் மூப்பான கொங்கணரும் பிரம சித்தர்

முக்கியமாம் மச்சமுனிநந்திதேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் r

கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான

வாசமுனி கமலமுனிகாப்புதான்ே.