பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் HI

புரோட்சணம்

இனி வலக்கைச் சுட்டுவிரல் நுனியைத் துரட்டி போல் வளைத்து, நின்ற நால்விரலையும் மடக்கி அங்குச முத்திரையினாலே புருவ நடு விந்து அமிர்தத்தை 'இருதையாய வெளஷட் என்று வாங்கிச்'சிவாயநம: என்று சலத்திலே வைப்பது புரோட்சணம். தாடனம்

வலக்கைச் சுட்டு விரலை நீட்டி மற்றைய நால்விரல்களையும் மடக்கிக் கீழ் நோக்கி அந்த விந்து அமிர்தம் தகர 'ஓம் அத்திராய பட் என்று அடித்து நிரந்ததைச் சிவோதகமாகப் பாவிப்பது தாடனம். 'ஓம் அத்திராய ஓம் பட் என்றடித்து அங்ங்வம் பாவிப்பது தாடனம் என்பாருமுளர்.

அப்பியுட்சணம்

பெரு விரலை உள்ளே மடக்கி மற்றை நால் விரலையுஞ் சேர்த்து நீட்டிய சுவத்திக முத்திரையால் அதாவது கவிழ்ந்த பதாக முத்திரையால் 'ஓம் கவசாயவெளஷட்’ என்று அந்த அமிர்தம் சலத்திலே அமிழும்படி மூடுவது அப்பியுட்சணம்.

ஆக, நிரீட்சணம்,புரோட்சணம், தாடனம், அப்பியுட்சணமாகிய இவையே நாற்சுத்தி எனப்படும்.

தாளத்திரையம்

வலக்கைப் பெருவிரல் ஒழிந்த விரல்களினால் பதாகை முத்திரை கொண்டு இட உள்ளங்கையிலே ஓம்