பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV சித்தர்கள் பூசாவிதிகள்

அஸ்திராய பட் என்று மூன்று தரந் தட்டுவது தாளத்திரையம்.

இட உள்ளங்கையில் வலக்கைச் சுட்டுவிரல் நடுவிரல் அணிவிரல் மூன்றையுஞ் சேர்த்து நீட்டி மற்ற இரு விரலையும் நீக்கிய கோவிடான முத்திரையால் 'ஓம் அஸ்திராய பட் என இட உள்ளங்கையில் தட்டுதல் தாளத்திரையம் என்பாருமுளர்.

இத் தாளத்திரையம் விக்கினம் பண்ணுகிற இராட்சதரை ஓட்டுவது. திக்குபந்தனம்

வலக்கைச் சிறுவிரல் முதலாகிய மூவிரலும் மடக்கிச் சுட்டுவிரல் நுனியால் பெருவிரல் அடிதொட்டுச் சோடிகா முத்திரையால் 'ஓம் அஸ்திராய பட்’ என்று சலத்திலே கிழக்கு முதலான பத்துத் திக்கிலும் தெளிப்பது திக்குபந்தனம். -

இது அந்த அமிர்தம் எங்கும் பரவாமல் அக்கினிக் கோட்டையிட்டதாகப் பாவிப்பது. அவகுண்டனம்

வலக்கைச் சுட்டுவிரலை நீட்டி மற்றைய நான்கு விரல்களையும் மடக்கிய அதீட்சணமுத்திரையினாலே'ஓம் கவசாய வெளஷட்' என்று ஒருமுறை வளையச் சுற்றுவது அவகுண்டனம்.

இது, அந்த அமிர்தத்துக்கும் கோட்டைக்கும் இரட்சையாகிய அகழியாம். இது பூதா அமிர்தம்.