பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலாங்கிநாதர் ஞான பூசாவிதி - 58

பெலமான நவகிரக பூசைபண்ணப் - பேருலகெல் லாம் உதுை வசமே ஆகும் தலமானநடுமனையாம் முக்கோணத்தில்

சார்ந்துகொண்டு வாசியினால் மூலத்து ஏ.கி நலமான புருவநடுக் கமல மீதில்

நாட்டமுடன்நின்றுகெதி கொண்டாயானால் குலமானநவக்கிரக வீட்டிலேதான்்

குருவான ஆதாரந் தோணும் பாரே. 77

தோணுமடாஆதாரம் மூலாதாரம்

துருவமென்ற ஓங்காரம் மேலாதாரம் காணுமடாகருணைவிழிக் கண்ணாற் பாரு

கமலமென்ற ஆயிரத்தெண் மலருக்குள்ளே தேனுட னே அமுதரசம் வடியும் அப்பா

தெகிட்டாதே நீஇருந்து கொண்டு தேறு ஊனுடனேஉயிர் சேர்ந்து சித்தியாகும்

உத்தமனே பத்தியுடன் உகந்து காணே. 72

காணப்பா நவகோணந்தன்னை வைத்துக்

கருணையுடன் மானதமாய்ப் பூசை செய்து பேணப்பாமூலமதிற் சிம்சிம்மென்று

பிலமான வாசியினால் மூலம் பார்த்தால் கோணப்பாஇருந்தஇடங் கண்ணிற் காணும்

குருவானதிருமூலர் பாதம் போற்றிப் பூணப்பாகண்டமதில் அங்கென்றுறு

புருவமையம் முக்கணனைப் போற்றிக்காத்தே. 73