பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குருவேதுணை

சுந்தரானந்தர் திருவாய் மலர்ந்தருளிய பூசா விதி 37.

ஆதிபராபரமான மூலநாயன்

அறுமுகவன் இருபதத்தை அன்பாய்ப் போற்றி வீதிநடு வீதிதனில் நின்ற சோதி

விளங்கிநின்ற சரசுபதியாள் பாதம்போற்றி பாதிபிறை விமலருமை திருமாலோடு

பார்தனிலே லெட்சுமிதன் பாதம் போற்றி சோதிமய மாகிநின்ற பூசைதன்னைச் -

சொல்லுகிறேன்கணபதியின் பாதங் காப்பாம். (1)

கேளடாநவகோணந்தன்னை நன்றாய்க்

கீறுவேன்.ஆறுமுக பாதம் போற்றி தாளடா இடைரேகைக் குறுக்கே கிறி

சாற்றுகிறேன் ஒருநெல்லு நீளமப்பா வாளடாபிங்கலையின் ரேகை கீழே

வயணமாய் நாலுநெல்லு நீளங் கீறு நீளடாசுழிமுனையின் ரேகை கீறி

நிகழ்த்துகிறேன் மூன்றுநெல்லு நீளங் கிறே. (2)