பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் (6)

என்று அமைத்தார்.

இந்த ஐந்து பொறிகளும் உலகத்தில் உள்ள ஆசைகளை எல்லாம் கொண்டு வந்து நம்முடைய 'மனம்' என்கிற வீட்டில் வைத்து நம்மைப் படாதபாடு படுத்துகின்றன.

இரண்டு பொறிகள்

இந்த ஐந்து பொறிகளில் இரண்டு பொறிகள் மிகவும் ஆபத்தானவை என்று அனுபவப் பெரியார்கள் கூறுகின்றார்கள்.

கண்ணும், வாயும், அந்த இரண்டு பொறிகளாகும். ஆதலால் தான் ஆண்டவன் இந்த இரண்டு பொறிகளுக்கு மட்டும் கதவுகள் போட்டிருக்கிறார் என்று பேசுவார்கள்.

கண்களுக்குக் கதவுகள் தான் இதழ்கள் என்றும், வாய்க்குக் கதவுகள் இரண்டு உதடுகள் என்றும் வழக்கத்தில். கூறுகிறார்கள். கண்கள் என்கின்ற பொறிகளை எல்லா இடத்திலேயும் எல்லா நேரங்களிலும், திறந்து வைத்திருக்கவே கூடாது. சில நேரங்களில் மூடிக் கொண்டிருப்பது போலவும், சிறிது திறந்திருப்பது போலவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுத் திண்ணையில் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தெருவில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார், அவரை, திண்ணையில் இருப்பவரின் கண்கள் கூர்மையாக உற்று நோக்கின. உடனே அந்தப் 'பேர்வழி' கோபமாக “என்ன. ஐயா, முறைத்துப் பார்க்கிறீர்?" என்று. சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறிது நேரத்துக்குள் இந்தக் கண்கள் அவ்வளவு சங்கடத்தை உண்டாக்கி விடக் கூடும்.