பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

நாயகியானவள் அந்த நெஞ்சத்தினைப் பார்த்துப் பேசுகின்றாள்.

"ஏ! நெஞ்சமே! நம் காதலர் எப்பொழுதும் உள்ளத் திலேயே இருந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க. வெளியில் எங்கேயோ தேடிக் கொண்டு செல்லுவது யாரிடமோ" என்று ஆழ்ந்த பொருட்பட பேசுகின்றாள். 'நாயகர்--நாயகி' பாவம் என்கின்ற கருத்து இன்ப வேகத்திலும் குறிப்பாக உணர்த்தப்படுவதைக் காண்கின்றோம்.

"உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு."

எல்லாம் வல்ல பரம்பொருள் நெஞ்சத்திலே இருக்கும் பொழுது இறைவனை வெளியில் போய் தேடுகிறீர்களே என்று சித்தர்கள் பாடுகின்ற முறை இங்கே ஒப்பிட்டு சிந்திக்கத் தக்கதாகும்!

சூடான உணவு

எல்லோரும் - எல்லாப் பெண்களும் -- கும்பலாக உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் உணவு அருந்தாமல் இருந்தாள். மற்ற பெண்கள் அவள் சாப்பிடாமல் இருப்பதற்குக் காரணம். கேட்டனர். அதற்கு அந்தக் காதலி, "உணவு மிகவும் சூடாக இருக்கின்றது. அந்த சூட்டுடனே நான் சாப்பிட்டால், அந்த உணவு உள்ளே போய் எப்பொழுதும் என் நெஞ்சிலேயே இருந்து கொண்டிருக்கின்ற காதலரைச் சுட்டுவிடும். இத்தகைய கருத்துரைகள் மிகுதியும் சிந்தித்துப் பயன்பெறத்தக்கனவாகும்.

"நெங்சத்தார் காத லவராக வெய்துஉண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து."

ஆதலால் தான் மனம் விட்டுப் பேசுகின்ற பழக்கம் பெரிதும் துணையாக இருக்கும் என்பது வெள்ளிடை