பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மனிதப் பண்பு

இந்த நாட்டுக்கு ஏன் கஷ்டம் வருகிறது, மக்கள் துன்பப் படுகிறார்கள், வறுமையிலே வாடுகிறார்கள். குழப்பத்திலே மூழ்குகிறார்கள், இவையெல்லாம் ஆகாயத்திலேயிருந்தா குதித்தன? மனித சமுதாயத்திலே மனித குணங்களே இல்லாதவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள்;

அப்படிப்பட்டவர்களாலே தான் இத்தகைய குழப்பங்களும் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இவற்றைச் செப்பனிட வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன் னோர்கள் நிறைய நூல்கள் எழுதி வைத்துப் போயிருக்கிறார்கள்.

இந்த உலகத்திலே எல்லாமே சட்டப்படிதான் நடக்கின்றன. இயற்கைச் சட்டம், செயற்கைச் சட்டம் என்ற இரு சட்டங்கள்தான் அவை. செயற்கைச் சட்டமெல்லாம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது.

பத்து மணிக்கு அலுவலகம் செல்லுவது; வேலை பார்ப்பது; மாலையில் வீடு திரும்புவது இவை போன்று பிற அனைத்தும் செயற்கைச் சட்டங்களாகும்.

சூரியன் வருவது, சந்திரன் வருவது, மழை பெய்வது, புயல் வீசுவது, வெள்ளம் வருவது மற்றும் இவை. போன்றவையெல்லாம் இயற்கைச் சட்டம்.

இவை இரண்டுக்கும் சட்டம் இருக்கும்போது ஒன்றுக்கு மட்டும் சட்டம் செய்யவில்லை. அது என்ன? இந்த உலகத்திலே' யார் யார் பிறக்கலாம்? யார் யார் பிறக்கக் கூடாது? என்று சட்டம் செய்யவில்லை. அதனால்தான் 'கண்டவன்' எல்லாம் பிறந்து விட்டு ஊரைப் பாழாக்குகிறான். அவனை நாம் கேட்க முடியவில்லை.."நீ ஏண்டா பிறந்தாய் என்று ஒருவர் கேட்டால்... நீ யார் அதைக் கேட்கறதுக்கு? நான் இன்னொரு தடவைக் கூடப் பிறப்பேன்,... என்று சண்டைக்கு வருவான்.