பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

ஒரு வார்த்தை இந்த வாயினால் சொல்லி விட்டால்----அந்த வார்த்தை ----ஒரே வார்த்தை, கடுமையானதாக இருந்து விட்டால் பெரிய தீங்கினை உண்டாக்கிவிடக் கூடும். ஆதலால் எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. பல நேரங்களில் வாயினை மூடிக் கொண்டிருத்தல் நல்லது, 'உதடுகளாகிய கதவுகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். . : : சிலர் பேசுகின்றபொழுது, மற்றவரைப் பார்த்து, "'வாயை மூடு" என்று சொல்வார்கள். அதற்குக் குறிப்பு என்னவென்றால், உதடுகளாகிய கதவுகளால் வாயை மூடு என்பது பொருளாகும்.

கடமை செய்தல்

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பொறிகளும் நல்லபடியாக தங்கள் கடமைகளைச் செய்தல் வேண்டும். பொறிகள் தங்கள் செயல்களைச் செய்ய வில்லையென்றால் இருந்தும் பயனில்லை அல்லவா?

தம்முடைய செயல்களைச் செய்யாத பொறிகளைப் பற்றி ஆசிரியர் திருவள்ளுவனார் குறித்துக் காட்டுகிற பொழுது,

.
. கோள்இல் பொறியின் குணமிலவே" 

என்று குறித்துக் காட்டுகிறார். உயர்ந்த அறிவு பெற்ற மனிதன் தன் அறிவின் துணையினால், இந்த ஐந்து பொறிகளையும் நல்லபடியாக அடக்கி நல்ல செயல்களையே செய்யுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

:

அறிவு என்கின்ற அங்குசத்தினால் பொறிகள் என்கிற ஐந்து யானைகளையும் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதனைத்தான் ஆசிரியர் வள்ளுவனார், ' . ' . - :