பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் கல்யாணம் செய்து கொண்ட பிற்பாடு மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும், அவன் மனதுக்கு சாந்தி தருபவள், மகிழ்ச்சி தருபவள், உற்சாகத்தை, ஊக்கத்தை, வலிமையைத் தருபவள் அவனுக்குத் துணையாக வந்த காரணத்தினாலே தான்.

இதற்காகத் தான் வள்ளுவர், 'வாழ்க்கைத் துணை' என்று பெயர் வைத்தார்....


'சான்றோன் எனக் கேட்ட தாய்!'


மாணவர்களுக்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும். ஞாபக சக்தியை வளர்ப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, அடிக்கடி கட்டுரை எழுத வேண்டும். படித்ததை ஒரு தடவை எழுதி விட்டால், அது பத்து தடவை படித்ததற்குச் சமம், படித்ததை ஒரு தடவை பேசிவிட்டால், அது பத்து முறை எழுதியதற்குச் சமம். நூறு முறை படிப்பதற்குச் சமம்!

மாணவர்கள் அடிக்கடி பேசிப் பழக வேண்டும். பேசிப் பழகுவதால் பெரிய பிரசங்கியாக ஆகி விடலாம் என்பதே அல்ல! நினைவாற்றல் அப்போது தான் வரும். மாணவர்களிடம் இரண்டு வார்த்தைகள் வரக்கூடாது. ஒன்று 'மறந்து விட்டேன்', இன்னொன்று, “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்...' இந்த இரண்டு வார்த்தைகளும் எவனுடைய வாழ்க்கையில் அடிக்கடி வருகிறதோ அவன் முன்னேற்றம் அடையவே மாட்டான்.

கெட்டிக்காரப் பிள்ளைகளாக இருந்தாலும் மறதி வந்துவிட்டால், தேர்வுகளில் மதிப்பெண் குறைந்து போய்