111
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னேயே திருவள்ளுவர் சொல்லி விட்டார், என்ன சொன்னார்?
“ஏ மனிதனே... நீ நல்ல நல்ல காரியங்களைத் தானாகவே செய்ய வேண்டும். நீ கல்வி கற்றுவிட்டால் பிறருக்குத் தானாகச் சொல்லித் தரவேண்டும், அவன் வந்தாலும் வராவிட்டாலும் 'இந்தாப்பா! இந்தக் கல்வியை நீ கற்றுக் கொள்' என்று அவனைக் கூப்பிட்டு சொல்லித் தர வேண்டும். அது தான் அறிவுடையவனுக்கு இலக்கணம்."
ஒரு பசுமாடு இருக்கிறது. ஒரு பொருளை உருட்ட வேண்டும் என்றால் அது தானாகவே போய் உருட்டும். உருட்டி உடைக்கும். ஒரு வேலியை உடைக்க வேண்டும். தானாகவே போய் உடைக்கும். ஒரு ஆளைப் போய் முட்ட வேண்டும். தானாகவே போய் முட்டும். இவ்வளவும் கெட்ட காரியங்கள்.
இவ்வளவும் செய்த அந்தப் பசுமாடு பால் கொடுப்பது நல்ல காரியம். ஆனால் அதைத் தானாகக் கொடுக்காது. தானாகவே நம் வீட்டிற்குள் வந்து, "எங்கே சொம்பைக் காணோமே" என்று அதுவே எடுத்து வந்து கறந்து கொடுத்துவிட்டுப் போகாது!
தாமாகவே செய்தல் வேண்டும்
“ஏ மனிதனே! நல்ல காரியத்தை மனிதன் தானாகச் செய்ய வேண்டும் என்றார் வள்ளுவர். இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. 'நன்றின்பால் உய்ப்பது அறிவு' என்று வள்ளுவர் இதற்காகத்தான் சொன்னார். அதனால் தான் 1330 திருக்குறளிலே மாணவர்களுக்குச் சொன்னது சிறப்பாக *கல்வியும் காலமும்' என்று கொள்ளுதல்: வேண்டும்.