பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

இதுவரைக்கும் யாருமே பார்க்காத ஒரு பழத்தைக் கொண்டு வந்து ஒரு பையனிடம் கொடுத்து, இதனைச் சாப்பிடு.., நன்றாக இருக்கும் என்றால், உடனே வாங்கி வாயில் போட்டுக் கொள்வானா? பயப்படுவான். "நான் இதுவரைக்கும் இதுமாதிரி பார்த்ததே கிடையாது!" என்று சொல்லி கொஞ்சமாக நாக்கிலே வைத்துப் பார்ப்பான்; அப்புறம் கொடுத்தவனிடமே அதனைத் திருப்பிக் கொடுத்து, “இதனை நீயே சாப்பிடு... உன் கதி என்ன ஆகிறது பார்ப்போம்" என்று சொல்லி விடுவான்.

இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு பழத்தைச் சாப்பிடத் தயங்குவது போல் தீய எண்ணங்களைத் தரும் நூல்களைப் படித்தல் கூடாது.

மனிதனும் மிருகமும்

உலகமெல்லாம் சுற்றி வரக்கூடிய கல்வியையும் அறிவையும் தனது தேச மக்கள் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டவன் பாரதி, அப்படிச் சுற்றி வருவதற்கான அறிவையும் கல்வியையும் பெறக்கூடிய பருவமே மாணவப் பருவம்,

"காசிநகர்ப் புலவர் பேசும்
உரைதான்.
காஞ்சியில் கேட்பதற்கோர்
கருவி செய்வோம்**

என்று பாரதி பாடினான். காசியிலே ஒருவர் பேசினால் அதைக் காஞ்சிபுரத்திலே இருப்பவர் கேட்க வேண்டும்.