பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

அப்போதெல்லாம் வானொலி கிடையாது. ஆனால், பாரதி தீர்க்கதரிசி, அதனால் அப்படிப் பாடினான்.

செய்வோம் செய்வோம்

'ஆயுதம் செய்வோம், காகிதம் செய்வோம்' என்றான் பாரதி, வாங்கினால் நம்மை எவனும் மதிக்க மாட்டான் . வாங்கினால் பிறர் நம்மை மதிப்பார்கள் என்றால், பாரதி கூட 'வாங்குவோம்' என்றே பாடியிருப்பான். ஆயுதம் வாங்குவோம். காகிதம் வாங்குவோம். காசில்லை யென்றால் கடனுக்கும் வாங்குவோம்" என்றே பாடியிருப்பான்.

இந்த மண்ணிலே பிறந்த பாரதி எவ்வளவு பாடி வைத்திருக்கிறான். யாருக்காகப் பாரதி பாடினான்? சைனாக்காரனுக்கும் ஜப்பான் காரனுக்குமா பாரதி பாடினான்? நமக்காகப் பாடினான்; நாளைய தினம் நம்முடைய பாரதியே மறுபடியும் வந்து கேட்கிறான். பாடல்களையெல்லாம் எழுதிக் கொடுத்தேனே.., அவற்றையெல்லாம் யாம் எழுதிய பாடல்களையெல்லாம் படித்து, அதன்படி நடக்கிறீர்களா?' என்று கேட்டால், எங்களுக் கெல்லாம் அந்தக் கெட்ட பழக்கம் இல்லை... என்று நாம் சொன்னால் இந்த நாடு முன்னேறுமா? நமக்கு உணர்ச்சியையும் உற்சாகத்தையும் ஊட்டியவன் பாரதி!

பெண்மணிகள்

பெண்களுக்காக எத்தனைப் பாடல்கள் பாடினான் பாரதி! ஒரு காலத்திலே நம்முடைய உடன் பிறந்த சகோதரிகளை எவ்வளவோ கேவலமாய் எண்ணிய பைத்தியக்காரர்கள் இந்த நாட்டிலேயே இருந்தார்கள். பெண்கள் புத்தகங்களைக் கையால் தொடக்கூடாது என்று கூட