பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

யானைகள்---ஆமை "உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்" (24) என்றும்

"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் (126) 

என்றும் சிறப்பித்துக் கூறினார். மனிதப் பிறவியின் தனிச் சிறப்பெல்லாம் அறிவு பெற்றிருப்பதால் தான் என்று தனிப் பெருமையாகப் பேச வந்த ஆசிரியர்,

 நன்றின்பால் உய்ப்பது அறிவு   (கு, 422}

என்று கூறினார்.

அதாவது அறிவுக்கு இலக்கணம் என்னவென்றால், நல்ல காரியங்களைத் தாமாகவே போய்ச் செய்யவேண்டும், மனிதப் பிறவிக்கு அடையாளம் அதுவே தான் என்பதாகும்.

மற்றவர் வந்து சொன்ன பிறகு தான் நற்செயல்களைச் செய்தல் வேண்டும் என்று இருப்பது மனிதப் பிறவிக்கு அழகானதல்ல.

"கடன் என்ப நல்லவை எல்லாம் (கு. 981).

என்று ஆசிரியர் திருவள்ளுவனார் வற்புறுத்திக் கூறியதும் இந்த உண்மையினை உணர்த்துவதற்கே ஆகும்.

விலங்கினம்

விலங்கினங்கள். (மிருகங்கள்) நல்ல காரியங்கள் செய்கின்றன. ஆனால் அறிவு இல்லாததால் நல்ல காரியங்களை விலங்கினங்கள் தாமாகவே செய்யா. அவைகளை நாம் நல்ல காரியங்களைச் செய்ய வைக்க வேண்டும்.

ஒரு பசு நமக்குப் பால் கொடுக்கிறது. பசும்பால் எவ்வளவு உயர்வானது என்பது உலகறிந்த செய்தியாகும்,