பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

“ஏ.., மனிதனே! கல்வியறிவு இல்லாவிட்டால் நீ மிருகம் தான்! கல்வி கற்க கற்கத்தான் அறிவு வளரும்' என்றார்.

மணற்கேணி

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு..." [396]

இந்தக் குறட்பாவிலே என்ன உதாரணம் சொன்னார்? கற்கக் கற்க அறிவு வளரும் என்று சொல்வதற்கு உதாரணம், “ஒரு கடையிலே போய்ச் சாமான்களை வாங்க நிறைய சேரும். , அது போல கற்க கற்க அறிவு வளரும் என்றா சொன்னார். “தோண்டத் தோண்ட கிணற்றில் தண்ணீர் வருவது போல் கற்க கற்க அறிவு வளரும்" என்றார். இதன் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிணற்றை எப்படித் தோண்டுவது? ஒரு கவிராயரைக் கூப்பிட்டு, "ஒரு பாட்டு எழுதி வையுங்க ...ஒரு கிணறு தோண்டணும்... என்றால், அவர் பாட்டு எழுதி வைத்தால் கிணறு தோண்டிவிட முடியுமா? ஒரு பேச்சாளரைக் கூப்பிட்டு, “கொஞ்ச நேரம், பேசுங்க. ஒரு கிணறு தோண்டணும்! என்றால் முடியுமா? நடக்காது. நாம் உழைக்கவேண்டும். உடம்பால் உழைத்துப் பள்ளம் தோண்டினால் தான் கிணறு உருவாகும்! தண்ணீரும் வரும். உடலுழைப்பினால் தான் சிறப்பு மிகுதியும் உண்டாகும் என்று கருதி, தொழிற் கல்வியைப் பேணுவதோடு, உடலுழைப்பு செய்ய தயங்கக் கூடாது என்பதற்காக, இந்த அரிய உதாரணத்தைக் கூறினார்.சி. க.---8