பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

உடனே மந்திரி சொன்னார், “முட்டாள் பட்டியலில் உங்க பேரை அடிச்சுட்டு அவன் பேரை எழுதிக் கொள்வேன்! அந்த இடம் காலியாக இருக்காது...!"

இல்வாழ்க்கை

மனிதனுடைய வாழ்க்கையே திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்துதான் தொடங்குகிறது என்று. அறிதல் வேண்டும். அந்தத் தினத்திலிருந்து தான் அவன் உலகத்தில் வாழத் தொடங்குகிறான். அது வரையில் வாழ்வதற்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தான் என்று தான் பொருள்.

"உடல் பலமும் ஆற்றலும் நிறைந்திருந்த ஒரு வாலிபன் அநேக சாதனைகளைச் செய்வதற்குத் துணை யில்லாமலிருந்தான்; இப்போது துணையாக ஒரு பெண்: வந்து விட்டாள்; இனி அருமையாகச் சாதனை யெல்லாம் சாதித்துவிடுவான்! என்ற மகிழ்ச்சியைக் காட்டுவதற்குத்தான் திருமண நாளில் வேடிக்கைகளும், கேளிக்கைகளும். நடத்துகிறார்கள். ஐந்து ஆண்டுகள் கழித்து, “என்னப்பா சாதித்தாய்?" என்றால், "ஆணிலே இரண்டு, பெண்ணிலே ஒன்று" என்று கூறுவதை சா'தனை என்று சொல்லிவிட முடியாது.

பொருளாதாரத்தில் முன்னேற்றமடைதல், பொதுக். காரியங்களில் பலருக்குப் பயன்பட்டு வந்து நல்ல பெயர் வாங்குதல்.--இத்தகைய உயர்ந்த செயல்களைத்தான் சாதனைகள் என்று சொல்ல வேண்டும்.

அறிவும் பழக்கமும்

நாம் காணுகிற மக்களில் பலர் அறிவோடு வாழ்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. உலகில் வாழ்க்கை . நடத்துவதற்கு அறிவு தேவை என்று சட்டம் கிடையாது. உலக வாழ்க்கையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.