பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124



மக்கள் 'கப்பலோட்டிய தமிழன்' என்றார்கள்!"
"சரி, நீங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர், உட்காருங்கள்...
இன்னொருவர் போனார்...
“ உங்க அப்பா என்ன பெயர் வைத்தார்கள்?
"ஏதோ குப்பனோ சுப்பனோ! என்றான்.
"மக்கள் என்ன பெயர் வைத்தார்கள்?
"மக்கள் ஒரு பெயரும் வைக்கலே..."
"பின்னே யார் வைத்தது?
"காவல் நிலையத்தில் பெயர் வைத்தார்கள்.

அவனைப் பார்த்து, "அடே, கேடிப்பயலே ... இறங்கிப் போடா... தேவலோகத்தையும் கெடுத்து விடாதே...' என்ற தாம் தெய்வம்!

அதனாலே தான் இந்த உலகத்திலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைவதற்குள் நீ செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்து விட்டுப் போக வேண்டும். அந்த நல்ல எண்ணங்களையெல்லாம் தோன்ற வேண்டுமே ! என்பதற்காகத் தான் நமது முன்னோர்கள் எல்லாம் நூல்களில் எழுதி வைத்தார்கள். அவற்றைக் கொஞ்சமாவது படிக்க வேண்டும்.

மறை நூல்கள்

மந்த்ர நூல்களுக்கெல்லாம் அர்த்தம் தெரியா விட்டாலும் பயனளிக்கும். இராமாயணம், பாரதம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் இவற்றைப் படிக்கிறபோது என்ன என்று அர்த்தம் கேட்க வேண்டும். தேவாரம், திருவாசகம், திருவருட்பா;