பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

திருக்குறள், நாலடியார், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களையெல்லாம் படிக்கும்போது அந்த வார்த்தைகளை இந்த நாவினால் உச்சரித்தாலே போதும். பயனடைவோம். அதற்கு அர்த்தம் தெரிந்தாலும் நல்லது... தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், அந்தச் 'சொற்களையெல்லாம் மந்திரச் சொற்கள்... சொன்னால் பலிக்கும். இதனை ஒரு பொதுக் கருத்தாகக் கொள்ள வேண்டும்.

பத்துப் பவுனை ஒருவர் சங்கிலியாகச் செய்து போட்டுக் கொண்டார். இன்னொருவர் பத்து பவுனையும் பொட்டலமாகக் கட்டி மடியிலே வைத்திருந்தார். இரண்டையும் கொண்டுபோய் வங்கியிலே கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். பத்து பவுன் கொடுப்பவரைப் பார்த்து, '* நீ சங்கிலியாகச் செய்து போட்டு வா... அப்ப தான் பணம் தருவோம்!" என்றா பாங்கியில் சொல்வார்கள்?

மூச்சு விடுதல்

எப்போது இந்தப் பாடல்களைச் சொல்வது? எப்பொழுது இறைவன் திருநாமத்தைச் சொல்வது? என்றெல்லாம் கேட்கக் கூடாது." "எப்ப எப்ப நீங்க மூச்சு விடுவீங்க? என்று ஒருத்தரைக் கேட்க முடியுமா? "காலையிலே கொஞ்ச நேரம் விடுவேன்... அப்புறம் நிறுத்திட்டு வேலைக்குப் போயிடுவேன். சாயந்தரம் வந்து தான் மூச்சு விடுவேன்... இல்லாட்டி சும்மா இருந்துடுவேன்... என்றா பதில் சொல்வீர்கள்?

உன்னை அறியாமலேயே மூக்கிலே மூச்சு வருவது போல, எந்நேரத்திலும் நாவினால் இறைவனது திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஏன் அப்படிச் சொன்னார்கள்? உன்னைக் கெடுக்கக் கூடிய