பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

இவ்வளவு உயர்ந்த பால் கொடுக்கின்ற பசு, விலங்கினம் ஆனபடியால், அதற்கு அறிவு கிடையாது, ஆகையினால் பால் கொடுக்கின்ற நல்ல காரியத்தை அது தானாகவே செய்யாது. நாம் பிடித்துக் கறக்கவேண்டும்.

நல்ல மனமும், நல்ல அறிவும் இல்லாத ஒருவன் தான தர்மம் செய்ய மாட்டான். அப்படிப்பட்டவனிடத்திலும் ஒருவர் நல்ல காரியத்துக்குப் பணம் வாங்கி வந்தால், உலக அனுபவத்தில் பலர் பேசுவார்கள். "அவனிடம் பணம் கறந்து விட்டார்" என்று சொல்வார்கள்." அதாவது விலங்கினம் போன்ற அறிவில்லாதவனிடமும் பணம் பெற்று வந்தான் என்பது குறிப்பாகும்.

ஒரு பசு தானாகவே வீட்டிற்கு வந்து, சொம்பினைத் தேடி. எடுத்துப் பாலினைக் கறந்து வைத்துவிட்டுப் 'போகாது. முன்பு சொன்னது போல் நாம்தான் பிடித்துக் கறக்க வேண்டும்.

ஒரு குதிரை, குதிரை வண்டிக்காரருக்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதித்துக் கொடுக்கும். அந்த வண்டிக்காரர், அந்தக் குதிரையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தக் குதிரையே தன்னைப் பயன்படுத்திக் கொள்ளும்படி காலையில் சென்று, குதிரை வண்டிக்காரர் களை எழுப்பாது! நாம்தான் விலங்கினங்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

கயவரும் கரும்பும்

அறிவு இல்லாத---தீமையான---தீய குணங்கள் உள்ள மக்களை----கீழ்மக்களை---கயவர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய கீழ்மக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், கரும்பில் சாறு எடுப்பதைப் போல, : 'நசுக்கப் பிழிவதைப் போல---பிழிந்தால் தான் கயமையான .மக்கள் பயன்படுவார்கள். இக் கருத்தினை ஆசிரியர் வள்ளுவனார்,