பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

போகத் தெரியும். வீடு, நிலம் வாங்கத் தெரியும்... திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளத் தெரியும். ஆனால் மனிதனாக வாழத் தெரியாது. இந்தக். கலையைக் கற்றுத் தருவதற்காகத்தான் அவ்வப்போது மகான்கள் தோன்றுகிறார்கள்.

இல்லறமாம் நல்லறம்

நம்மைப் பத்து மாதம் சுமந்து பெறுகிறவள் தாய். அச்சமயம் ஆசைப்பட்டதை எல்லாம் உண்ணாமல், நமக்காக நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள்.

தாயார் இறந்தவுடனேயே பட்டினத்தடிகள் அழுதார். "பட்டினத்தாரே, நீங்கள் துறவியாயிற்றே... தாயார் இறந்ததற்காகத் தாங்கள் அழலாமா? நாங்கள் எல்லாம்: இன்ப துன்பங்களிலே கலந்திருப்பவர்கள்.... சிரிப்போம்.., அழுவோம். நீங்கள் இப்படிச் செய்யலாமா?" என்று சிலர் அவரைப் பார்த்துக் கேட்டார்கள்.... அதற்குப் பட்டினத்தார், "அவர் தாயார் இல்லை ... எனது தெய்வம்!... என்றார்.

தாயான தெய்வம்

யார் தூங்கி எழுந்தவுடனே 'அம்மா' என்ற தெய்வ சிந்தனையோடு எழுந்திருக்கிறானோ அவன் வாழ்க்கையில்:உயர்ந்து சிறந்து விளங்குவான்...

'வட்டிலிலும் தொட்டிலிலும்
மார் மேலும் தோள் மேலும்
கட்டிலிலும் வைத்து
என்னைக் காப்பாற்றி...'

என்றார் பட்டினத்தடிகள்.