பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தகப்பனாரா இவ்வாறெல்லாம் காப்பாற்றினார்?

தாய் அல்லவா காப்பாற்றினாள்! தாய்மை என்றால் அன்பு என்று பொருள். அன்பு பெண்களுக்கு இயற்கையாகவே உண்டு.

'வீற்றிருந்தாள் அன்னை
வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று
வெந்து நீறானாள்.....'

'முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்து
அந்திப் பகலாய் சிவனை யாதரித்து...'

என்று கூறுகிறார் பட்டினத்தார்.

மனிதனுக்குப் பெருமையெல்லாம் அவனுக்குப் பண்பு வருவதால் தான்... பண்பில்லாத மனிதர் வீதியில் போனால் 'அதோ போறாரே... அவர் எம். ஏ., படித்தவர். எரிஞ்சு எரிஞ்சு விழுவார்' என்று அறிமுகப் படுத்தினார். அத்தனைக் காலம் அவன் படித்த படிப்புக்கு என்ன பொருள்?

மனிதப் பிறவிக்கு அடையாளம்

மனிதன் நல்ல புண்புகளை அடைய வேண்டும்... - பிறருக்கு உதவ வேண்டும். இந்த உலகத்துக்கு நன்றி காட்டுகிறாய் என்று அப்போது தான் பொருள்.

இவற்றையெல்லாம் பெறுவதற்கு உனக்கு அளிக்கப்பட்ட துணைவிக்குத்தான் மனைவி என்று பெயர். அவள் அன்பு நிறைந்தவள், பண்பு நிறைந்தவள், ஒழுக்கம் நிறைந்தவள்.

"ஆண்களுக்கு உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. இன்று முதல் என் உடம்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்... என்று திருமணமானவுடன் ஆண்