பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

பெண்ணிடமும், எனது உயிரைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று பெண் ஆணிடமும் தங்களைத் தாங்களே திருமண நாளில் ஒப்படைத்துக் கொள்கிறார்கள். இதுவே 'உடம்பொடு உயிரிடை என்ன... நட்பு' -என்று வள்ளுவர் சொன்னார். இது மறை பொருளான தத்துவம்.


அரிய உண்மைகள்

மருவுண்ணச் செல்லுதல் என்று ஒரு வழக்கம் உண்டு. திருமணமானவுடன் மாப்பிள்ளையை அழைத்து மாமனார் வீட்டில் ஐந்தாறு நாட்கள் வைத்திருந்து விருந்தளித்து மகிழ்வார்கள். ஏன்? அதுவரை அவன் பட்டினியாகவா கிடந்தான்? 'தற்காத்துத் தற்கொண்டான் பேணி...' -என்றாரே வள்ளுவர். கணவன் எது எது பிரியமாகச் சாப்பிடுவார், எது எது அவருக்குப் பிடிக்காது என்று ஒரு அய்ந்தாறு நாட்கள் தனது வீட்டில் அவருக்குச் சோறு போடுவதன் மூலம் அவள் அறிந்து கொள்வாள். ஏன்? அவர் உடம்பை வாழ்நாள் முழுவதும் அவள் காப்பாற்ற வேண்டுமல்லவா?

'உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122)

என்றார். திருவள்ளுவர். அவளும் நீயும் உயிரும் உடம்பும் போல் வாழவேண்டும். உனக்கு அதிகம் கோபம் வந்தால் அந்தக் கோபத்தை அவள் தணிக்கவேண்டும். ஆண்கள் உடம்பில் சூடு இருக்க வேண்டும், அதனால்தான் கோபம் வரும்போது, 'உன் உடம்பிலே சூடு----சொரணை இருக்கிறதா' என்று கேட்பார்கள்.