பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லாமல் அவளுடைய தாயார் வீட்டிலேயே விட்டுவிட்டுப் போனால் என்ன கொடுமையோ அந்த மாதிரி நீ செய்கிறாயே!" என்றார், இராமலிங்க சுவாமிகள்.

இத்தகைய சிறப்புப் பெற்றதுதான் இல்லறம்.


கல்வியும் காலமும்

உலகில் மிகவும் அருமையானது என்னவென்றால் அது காலம் தான். எல்லாம் போனால் வரும். காலமும் நேரமும் போனால் வராது, மேசை, நாற்காலி போனாலும் வரும். இந்த மலர்மாலை போனாலும் வரும், 'நோட்'டுகள், புத்தகமோ தொலைந்து போய்விட்டாலும் திரும்ப வாங்கலாம்; ஆனால், தேர்வு நேரத்தில் ஒரு பையன் நான்கு நாட்களை வீணடித்துவிட்டால் போனது போனதுதான்.

இன்னொரு மாணவனிடத்திலே கடன் கேட்க முடியாது. "ஒரு நாலு நாள் இருந்தால் கொடுடா...மனப்பாடம் பண்ணிட்டுத் திரும்பத் தந்து விடுகிறேன்... என்றெல்லாம் கேட்க முடியாது. ஆகையினாலே தான் வள்ளுவர் படிக்கின்ற மாணவர்களுக்குக் குறிப்பாக கல்வியும் காலமும் என்ற இரண்டு அதிகாரங்களைச் சொன்னார்....

வீணாக்கக் கூடாது

ஒரு விநாடியைக்கூட மாணவர்கள் வீணாக்கக் கூடாது, ஏன்? கல்வி மாத்திரம், படிப்பு மாத்திரம் இந்த வயதிலே தான் வரும். எல்லா வயதிலேயும் வராது. அதனால்தான்சி. க. ---9