பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் தலைமையாசிரியர் என்ன செய்கிறார்? பள்ளிக்கூடத்தில் சேரவரும்போது உன் வயது சான்றிதழ் கொண்டு வந்தாயா? என்று கேட்கிறார். ஏன்? அதிலே நீ பிறந்த தேதி இருக்கும். இவனுக்குப் படிப்பு வருகிற வயசுதானா? என்று பார்த்துத்தான் சேர்ப்பார். எல்லா வயசிலேயும் சேர்க்கமாட்டார்.

ஒரு தலைமையாசிரியரிடத்திலே ... நாற்பது வயது நாலு ஆட்கள் வந்து, எங்சுளை ஏழாவது வகுப்பில் சேர்த்துக்குங்க...சார்... என்றால் சேர்த்துக் கொள்வது தானே! தலைமையாசிரியர் பயப்படுவார், படிக்க வருகிறீர்களா? மேசை நாற்காலியைத் தூக்கிக்கொண்டு போக வந்தீர்களா... என்று தான் கேட்பார்.

அழியாச் செல்வம்

இந்த உலகத்திலே எல்லாச் செல்வமும் மறைந்துவிடும், அழிந்துவிடும். நான் வெளியூர் சென்றபோது என் நண்பரைக் கேட்டேன், இருபது, இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே இங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்ததே. அது எங்கே? என்று. அது புயற்காற்றிலே விழுந்துவிட்டது என்று சொன்னார். இது அழிகிற செல்வம், "அங்கே ஒரு பெரிய கட்டடம் இருந்ததே, அது எங்கே சார்?" “அது மழை பெய்து இடிந்துவிட்டது என்று பதில் வந்தது. இதுவும் அழிகிற செல்வம். சில பேர் பார்ப்பதற்கு அழகாய் இருப்பார்கள். அதுவும் அழகும் அழிகிற செல்வம் தான். அழகு கொஞ்ச நாளைக்கு இருக்கும், அப்புறம் போய்விடும். அதனால் தான் சில பேர் சீக்கிரம் 'போட்டோ' 'எடுத்துக் கொள்வார்கள், இருக்கிறதும் போய்விடுமே என்று!