பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கூடிய பருவம் இந்த மாணவப் பருவம்" என்று பாரதி. அக்கறையோடு ஆர்வமுடன் கூப்பிட்டான்.

“வாருங்கள்! உலகமெல்லாம் சுற்றி வருவோம்!' என்று. அழைக்கிறான் பாரதி.

வெட்டுக்கனிகள் செய்து தங்க முதலாம்---
வேறு கனிகள்பல குடைந்தெடுப்போம்.
எட்டுத் திசைகளிலும் சென்று இவை விற்றே
எண்ணும் பல பொருளும் கொண்டு வருவோம்!

தன்னுடைய தேசத்தில் உள்ள எல்லா மக்களும் உலக மெல்லாம் சுற்றி வரக்கூடிய கல்வியையும் அறிவையும் பெற வேண்டும் என்று பாரதிக்குத்தான் எத்தனை ஆசை!


கல்விக்கூடம் ஒரு கோயில்...!


நான் திரிச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் உயர்நிலைப். பள்ளியில் மாணவனாக இருந்த காலத்தில் எனது பள்ளிக்கு வந்து பேசிய பெரியோர்களது வார்த்தைகளை நான் இன்னும் மறக்கவில்லை. நான் பள்ளிக்கூடங்களுக்குப் பேசப் போகிற பொழுதெல்லாம் அந்த வார்த்தைகளை மாணவர்களுக்குச் சொல்வது வழக்கம். அப்போது எனது பள்ளிக்கு வந்த பெரியோர்கள் அனைவரும், "மாணவர்களே ! எதிர்காலம் உங்கள் கையிலே இருக்கிறது" என்று சொன்னார்கள், அது எவ்வளவு முக்கியமான வார்த்தை !

எதிர்காலம்

எதிர்காலம் என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், சின்ன வயது உள்ளவர்களின் வயது வளர்கிறது. கல்வி வளர்கிறது. அறிவு வளர்கிறது. புத்திசாலித்தனம் வளர்கிறது. தெம்பு, உருவம், உற்சாகம் எல்லாம் வளரக் கூடிய