பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

பருவம். இப்படிப்பட்ட பருவம் திரும்பவும் நமக்குக் கிடைக்காது. அதனால்தான் வளரக்கூடிய பருவத்திலே இருப்பவர்களைப் பார்த்து தான் எதிர்காலம் உங்கள் கையிலே இருக்கிறது' என்று சொல்லுவார்கள்.

வயது முதிர்ந்தவர்களைப் பார்த்து, 'எதிர்காலம் உங்கள் கையிலே இருக்கிறது' என்றா சொல்லுவார்கள்? வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துச் சொல்லமாட்டார்கள். எழுபது வயது, எண்பது வயது ஆன கிழவர்களாக-ஒரு ஐம்பது பேரை உட்கார வைத்துக் கொண்டு பெரியவர்களே... எதிர்காலம் உங்கள் கையிலே தான் இருக்கிறது என்று யாரும் சொல்லமாட்டார்கள். சொன்னால் என்ன பதில் சொல்லு வார்கள்? எங்கள் கையில் தடி தான் இருக் கிறது என்று சொல்லுவார்கள். காரணம் வயது ஆகிவிட்டால் எல்லாம் போக வேண்டியதுதான்.

கல்விமான்கள்

நான் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் போகும்போதெல்லாம் சின்னப் பிள்ளை களைப் பார்த்துச் சொல்வது இது தான். "எதிர் காலத்திலே நீங்கள் சிறந்து விளங்குவதற்கு ஒரே வழி, கல்விமான்களாகவும் அறிஞர்களாகவும் ஆவது ஒன்றுதான். உலகத்திலே இருக்கிற எல்லா தேசங்களிலும் ஆண்களும் 'பெண்களும் நூற்றுக்கு நூறு கல்வி கற்று அறிஞர்களாக ஆகி விட்டார்கள். அந்த நிலை நம்முடைய தேசத்திற்கு இன்னும் வரவில்லை."

நாடு வீடு

கல்வி இல்லாத நாடு, விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டிலே யார் குடியிருப்பார்கள்? இருட்டாயிருக்கும். ஒரு நாலு பேர் விளக்கில்லாத வீட்டிலே குடியிருப்பதாக வைத்துக் கொள்வோம், நாலு பேரும் இரவில் படுத்