பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

துத் தூங்குகிறார்கள். இரவு ஒரு மணிக்கு ஒருவன் எழுதி திருக்கிறான். வெளியிலே வரவேண்டும். 'எப்படி. வருவது? - பக்கத்திலே படுத்திருப்பவன் படுத்திருக்கிறவன் கழுத்திலே காலை வைத்து மிதிப்பான்.

மிதித்துவிட்டு அவனையே கேட்பான்: “எங்கடா படுத். திருக்கே? என்று. அவன், “நான் எமலோகத்துக்குப் போகிற வழியிலே இருக்கேன்' என்பான். காலை வைத்தவனே மறுபடியும் “ஏண்டா எமலோகம் போகிறே? என்று கேட்பான். நீதான் அனுப்புகிறாயே... அதனால் தான் போறேன்” என்பான் பதிலுக்கு. அவன் வேண்டுமென்றா கழுத்தை மிதித்தான்? இருட்டிலே கண் தெரியாமல் மிதித்துவிட்டான். அது போல கல்வி அறிவு இல்லாதவன். வீட்டிலே ஒன்றுமில்லாததற்குக் கூட வெட்டிக் கொள்ளுவான்---குத்திக் கொள்ளுவான் !!

கல்வி ஒளி

நமது நாடு மீண்டும் கல்வி ஒளி பெற்று விளங்கவேண்டும். இதற்காகத்தான் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறோம். பள்ளிக்கூடத்திலே தலைமையாசிரியர், கணித ஆசிரியர், விஞ்ஞான ஆசிரியர் தமிழாசிரியர், சரித்திர ஆசிரியர் என்று எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்களால் தான் இளம் பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும். மாணவர்களில் எத்தனையோ டாக்டர்கள் இப்போது இருப்பார்கள். எத்தனையோ இன்ஜினீயர்கள் இருப்பார்கள். எத்த னையோ விஞ்ஞானிகள் இருப்பார்கள்.

அதைக் கண்டுபிடித்து சொல்லுபவர்களே ஆசிரியர்கள், அதை நோக்கிச் செலுத்துவதற்காகத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தாய் தகப்பனுக்கு அது தெரியாது. அவர்கள் சாப்பாடு போடுவார்கள். துணிமணி எடுத்துக் கொடுப்பார்கள். புத்தகம் வாங்கிக் கொடுப்பார்கள் அவ்வளவுதான்.