பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

மறந்துவிட்டுப் பாடுகிறார் என்று தான் ஆகிவிடும். -எதுவுமே அளவோடு இருக்க வேண்டும்.

தன் கலை எந்த அளவுக்கு மக்களுக்குக் கவர்ச்சி உண்டாக்கும் என்று புரிந்துகொண்டு அதை நிறுத்துகிற போது அவன் கலைஞனாகிறான்.

சனி விளக்கம்

துன்பத்தில் சிக்கியிருக்கும் மனிதரைப் பார்த்து, "அவரைச் சனியன் பிடித்திருக்கிறான் என்று சொல்லுவார்கள். சில பேரைக் குறித்துப் பேசும்போது, “அவன் பெரிய சனியண்டா” என்பார்கள். இதற்கு ரொம்ப -பேருக்கு அர்த்தமே தெரிவதில்லை. 'சனியன் என்றால் ரொம்ப கெடுதி செய்கிறவன்... பெரிய துன்பத்தை உண்டாக்குகிறவன்' என்றெல்லாம் பல பேர் பேசுவார்கள். அப்படி.ச் சொல்லவே கூடாது. அது சரியான அர்த்தமே இல்லை.

ஜோதிட சக்கரம்

ஜோசியம் தெரிந்தவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் என்பதெல்லாம் பனிரெண்டு ராசிகள். பிறகு சூரியன், சந்திரன், ராகு, கேது இவை எல்லாம் கிரகங்கள். இதிலே சனியன் ஒரு கிரகம். இதில் ஒவ்வொரு கிரகமும் ஒரு வீட்டிலேயிருந்து இன்னொரு வீட்டிற்கு வருவதற்கு இத்தனை ஆண்டு ஆகும் என்று சொல்லுவார்கள். ஜோசியக் கணக்கிலே குரு பகவான் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு வருவதற்கு ஒரு ஆண்டு ஆகும். அப்புறம் ராகு, கேது என்னும் கிரகங்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு வருவதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும். மற்ற கிரகங்கள் எல்லாம் ஆறு மாதத்திலோ, சில நாட்களிலோ மாறிவிடும்.