பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

"சனியன் உங்களைப் பிடித்துள்ளான். சீக்கிரம் விடமாட்... டான்...” என்றுதான் அர்த்தம். இந்த சாதாரண கருத்து கூட நண்பர்களுக்கு அவ்வளவு சுலபமாகத் தெரிவதில்லை.

தவத்திரு வாரியார் சுவாமிகள்

நல்ல கருத்துக்களைக்கூட நகைச்சுவையாக, அழகாகச் சொல்வதிலே நம்முடைய வாரியார் சுவாமிகள் வல்லவர்.. சில நேரங்களிலே அவர் ஆங்கிலச் சொற்களை அழகாகக் கையாளுகிற வல்லமை படைத்தவர்.

ஒரு தடவை நாங்கள் ஒரு விழாவுக்குப்போயிருந்தோம். நல்ல அறிஞர்கள் எல்லாரும் பேசினார்கள். வாரியார் சுவாமிகள் தான் தலைமை. எல்லாரும் பேசி முடித்து விட்டுப் புறப்படத் தயாரானோம். கார் கொண்டு வந்தார்கள், உடனே வாரியார் சுவாமிகள் எங்களையெல்லாம். பார்த்து, "உங்களை எல்லாம் 'கவர்' பண்ணியாச்சா..?" என்று கேட்டார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை .... 'கவர் பண்ணியாச்சா' என்றால் என்ன? சாதாரணமாக: - “கவர்' பண்ணினாங்களா? என்றால், உங்களை யெல்லாம் கவர்ந்து கொண்டார்களா? என்றுதான் பொருள்.

இவர். என்ன கேட்டார் என்றால், 'உங்களையெல்லாம் கவர் பண்ணியாச்சா?' என்று... அதாவது, சன்மானத்தை ஒரு கவருக்குள்ளே தான் போட்டுக் கொடுப்பார்கள். அதாவது "நீங்க பணம் வாங்கிவிட்டீர்களா? என்று கேட்பதற்குப் பதிலாக, , வாரியார் சுவாமிகள். இப்படி, "உங்களை எல்லாம் கவர் பண்ணியாச்சா? என்று மறைமுகமாகக் கேட்டார்.

எனக்கு முதலிலே புரியாமல்; பக்கத்திலிருந்த பேராசிரியரைக் கேட்க, அவர் எனக்குப் புரியும்படி சொன்னார். அப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது, வாரியார்