பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

தான் திருவள்ளுவர், “நீ ஒருவன் கற்றுவிட்டால் அதனால் இந்த உலகமே பயனடைய வேண்டும்' என்று சொல்லுகிறார். 'தாம் இன்புறுவது உ.லகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்...'

கும்பலாக உட்கார்ந்த பொழுது ஒருவனுக்குச் சாப்பிடும் நினைப்பு வந்தவுடனே, “இருங்கள்... இதோ வருகிறேன்' என்று தனியாக ஓடினான். ஓடிச் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான். ஆனால், சொற்பொழிவு - செய்யும்போது அப்படியல்ல. பிரசங்கம் பண்ணுகிறவர் எல்லோரையும் கூப்பிடுவார்...ஏன்... அவ்வளவு தூரத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்...? அருகாமையில் வாருங்கள்... என்று அழைப்பார். அவரைத்தான் “கற்றறிந்தார் என்று சொல்லுகிறார் வள்ளுவர். அப்படிப்பட்ட இன்பத்தை -- இந்த மனித வாழ்க்கையில் நாம் அனுபவிக்க வேண்டும்.

இது ஒரு பெரிய ஆற்றல் என்பது திருவள்ளுவர் கருத்து. மனத்திலே இருக்கிறதையெல்லாம் வெளியிலே எடுத்துச் சொல்வதென்பதே பெரிய கலை. பல பேருக்கு வராது, மனசிலே இருக்கும், வெளியிலே சொல்ல வராது. சில பேர் பேசும் போது நெஞ்சைக் காட்டி, எல்லாம் இங்கேயே இருக்கு... வெளியிலே வர்றதில்லை ... என்று சொல்லுவார்கள். ஏன் வருவதுதானே?

மனதிலே இருக்கிறதையெல்லாம் வெளியிலே எடுத்துச் சொல்வதற்கே ஒரு ஆற்றலும் பழக்கமும் வேண்டும். அதனால் தான், நாம் எடுத்துச் சொல்லுகிறபோழுது மற்றவர்கள் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். "தாமின்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் . கற்றறிந்தார்...

இந்த முறையிலே கல்வியைக் கற்றவர்கள் உலகம் , எல்லாம் இன்புறுவதைக் கண்டும் கேட்டும் தாமும் :இன்புறுவார்கள் என்று சொல்லுகிறார். அதுதான் இந்தக்...