பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

பழக்கம்

பழக்கத்தினால் வாழ்பவர்கள் உண்டு----உறங்கி---இனத்தைப் பெருக்கி காலத்தைத் தள்ளிக் கொண்டு போவார்கள். விலங்கினங்களாகிய ஆடு, மாடு, முதவியன பிறக்கின்றன----உண்டு உறங்கி---வாழ்கின்றன. காலத் தினால் மறைகின்றன. அவைகள் பல செயல்கள் புரிந்தாலும், அறிவு கொண்டு செய்வதில்லை.

காலையில் வீட்டில் பசுமாட்டினை அவிழ்த்து விரட்டி விடுகின்றோம். ஒரு நாள் முழுவதும் பல இடங்களில் மேய்ந்துவிட்டு, மாலையில் தானே நம் வீட்டிற்குள் நுழைந்து, தம் இடத்திற்குப் போய்விடுகிறது. இப்படி அந்த மாடு செய்வது பழக்கத்தினாலே தான். மாலையில் அந்த வீட்டிற்கு வருகின்ற வழிகளை எல்லாம் சிந்தித்து தெரிந்து கொண்டு----தானா. வருகிறது?

மேய்ந்துவிட்டு, குளத்தங்கரை வழியாகப் போய் கோவில் வழியாகத் திரும்பி, கடைத்தெரு சந்து வழியாக வந்து, சின்ன திடலைத் தாண்டிக் கொண்டு, நம் வீட்டிற்குள் போய்ச் சேர வேண்டும் என்றெல்லாம் தெரிந்து கொண்டுதானா அந்த மாடு செல்கிறது? அந்த மாடு செய்வது அனைத்தும், பழக்கத்தினாலேயே ஆகும்.


அதுவே போல, உலகில் வாழ்கின்ற பலர், அவிழ்த்து விட்ட பசு போல, காலையில் புறப்பட்டுப் போய் பழக்க வழக்கமான பல வேலைகளை முடித்துவிட்டு மாலையில் 'வீடு வந்து சேர்கிறார்கள்! இப்படி - வாழ்வதெல்லாம் பழக்கத்தினால் வாழ்கின்ற வாழ்க்கையாகும்.


இரண்டு வகை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய திருவள்ளுவனாரும் "அறிவு உடைமை" என்ற அதிகாரத்தில் அறிவுடையோர்----அறிவில்லாதவர்----என்று மக்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளார்: அந்தக் காலத்