பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

குறட்பாவினுடைய ஆழ்ந்த கருத்து. இன்பம் என்ற 'சொல்லுக்காகத்தான் இவ்வளவும் விளக்க வேண்டியிருக்கிறது.

நிலைத்த இன்பம்

ஏன்? அந்த இன்பம் நிலைத்து நிற்கிற இன்பம். உலகம் . உள்ளளவும் புகழைக் கொடுக்கிற இன்பம், ஏனென்றால், . படிக்கப் படிக்க, சிந்திக்கச் சிந்திக்கத்தானே நமக்கு அநேக உண்மைகள் தெரியவருகின்றன!

"செய்யும் தொழிலே தெய்வம்! என்ற பழமொழிக்குப் பலருக்கு அர்த்தமே தெரியாது. சில பேர் ஆயுத பூசை வந்தவுடனே அவன் என்னென்ன சாமான்களை வைத்துத் தொழில் செய்கிறானோ அதையெல்லாம், சுத்தமாக வைத்து அவைகளுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து கும்பிட்டு விட்டு மறுநாள் வேலைக்குப் போவது தான், 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று நினைக்கிறார்கள். அதன் உண்மையான கருத்தை மேல் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தான் பின்பற்றுகிறார்கள் என்றால் யாரும் வருத்தப்பட்டுக்கொள்ளக்கூடாது.

ஐம்பூத சக்தி

ஒரு தொழிலாளி வாழ்க்கையிலே முன்னுக்கு வர வேண்டுமென்றால், அவன் இந்தப் பழமொழியின் அர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், உலகத்திலே நிலம், நீர், தீ, காற்று, விண் என்று ஐந்து பூதங்கள் இருக்கின்றன. உலகத்தையே இந்த ஐந்து பிரிவுகள் தான் நடத்துகின்றன,

தாயுமான சுவாமிகள் 'ஐவகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சரபேதமான யாவையும்' என்று பேசுவார். நிலம், நீர், தீ, காற்று, விண் என்று ஐந்தும்தான்