பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தொழிலின் ஆற்றல்

நான் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே ஒருவரைப் பார்த்து, ஒரு மேசை செய்து தர வேண்டும், என்று கேட்டேன். அதற்கு 'இவ்வளவு சாமான் வாங்கிக். கொடுக்கவேண்டும்' என்று சொன்னார் அவர். 'நூறு' வெள்ளி கொடுத்தேன்; எவ்வளவு கூலி என்று: கேட்டேன். முப்பது வெள்ளி கொடுங்கள் என்றார். 'என்னைக்கு வரணும்?' என்று கேட்டேன் . '10-ம் தேதி. மத்தியானம் வாங்க' என்றார். சரி என்று சொல்லி அவர் கேட்டதைக் கொடுத்துவிட்டுப் பத்தாம் தேதி மத்தியானம் போனேன்.

அந்தப் பொருளை அவர் எடுத்துக் கொடுத்தார். அது எவ்வளவு நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதைவிட நூறு மடங்கு நன்றாக இருந்தது, “என்னப்பா இவ்வளவு அற்புதமாகச் செஞ்சிருக்கிறாயே' ன்னு என்று நான் கேட்டேன்.

வேலையாளின் கருத்து

அதற்கு அவர், “என்னைக் காப்பாற்றுவது இந்தத் தொழில். இந்தத் தொழிலுக்கு நான் துரோகம் செய்தால் நான் வாழ முடியாது. நீங்கள் ஆண்டு முன்னுத்தறுபத்தைந்து நாளும் வேலை தர மாட்டீங்க, கூலி தர மாட்டீங்க. என்னிக்கோ ஒரு நாள் வருவீங்க... வேலை தருவீங்க. உங்களைத் திருப்திப்படுத்தவேண்டிய அவசியம். கூட எனக்குக் கிடையாது. இந்தத் தொழிலையே நான் திருப்தி செய்யணும்.

இந்தத் தொழிலுக்கு நான் விசுவாசமாக இருக்கணும். "இந்தத் தொழிலுக்கு நான் வஞ்சனை செய்தால் வாழ முடியாது என்றார். இது தான் 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது. எந்த நாட்டில் இந்த எண்ணமிருக்கிறதோ... அந்த நாட்டிலே தான் தொழிலாளர் முன்னேற்றம் அடைவார்கள், தொழில் வளர்ச்சி அடையும்.