பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஈத்து உவக்கும் இன்பம்

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்: திருவள்ளுவர் குழல், யாழ் என்ற இரண்டைத்தானே சொன்னார்! குழலினால் வரக்கூடிய இனிமையும் யாழினால் வரக்கூடிய இனிமையும்--ஆக இந்த இரண்டு இனிமைகள் இருக்கின்றனவே, இந்த இரண்டு கருவிகளினால் வரக்கூடிய நாதங்கள், குழந்தைகளது மழலைச் சொற்களை மிஞ்சுவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த உலகத்திலே எத்தனையோ இசைக் கருவிகள் இருக் இன்றனவே, அவற்றிலே மழலைச் சொற்களையும் மீறி இனிமையைக் கொடுக்கின்ற இசைக்கருவிகள் இருக்கலா மல்லவா?

குழலும் யாழும்

இது நியாயமான கேள்விதான், குழலையும் யாழையும் விட மற்ற. கருவிகள் மழலைச் சொல்லை விட அதிகமான இனிமையைக் கொடுக்குமே என்று நினைப்பவர்களும் உண்டு. அதனால் தான் திருவள்ளுவர் குழலையும் யாழையும் எடுத்துக் கொண்டார். உலகத்திற்குப் பொதுமறை கூறிய திருவள்ளுவர், உலகத்திலேயே வாசிக்கக்கூடிய இசைக் கருவிகளை இரண்டு வகையாகப் பிரித்துக் காட்டினார் என்று கொள்ள வேண்டும். ஒன்று, வாயினால் வாசிப்பது. மற்றொன்று கையினால் வாசிப்பது. வாயினாலும் கையினாலும் வாசிக்காத இசைக் கருவிகளே உலகத்திலே கிடையாது.

குழல் என்பது வாயினால் வாசிக்கும் இசைக்கருவிகள் அனைத்தையும் குறிக்கிறது. யாழ் என்பது கையினால்சி, க,-10