பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

எல்லோரும் சேர்ந்து உட்கார வேண்டும். இவர் எடுத்துச் சொல்லுவார். அதை மற்றவர்கள் கேட்டு அனுபவிப்பார்கள். அதை இவரும் கேட்டு, பார்த்து மகிழ்ச்சியடைவார். அது தான் 'தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு" என்றார். நாம் எதைக் கற்று அனுபவித்தோமோ அதைப் பிறரும் அனுபவிக்கிறார்களே என்ற இன்பம்... எல்லோரும் சேர்ந்து அனுபவிக்கிற இந்த இன்பம் தான் கல்வி.

கல்வியின் பெருஞ்சிறப்பு

அதனால்தான் கல்வி கற்றவர்களை எல்லோரும் கூப்பிடுகிறார்கள். கற்றவர்கள் எந்த வெளிநாட்டிலிருந்தாலும், கூப்பிடுகிறார்கள். சென்னையிலிருப்பவரை, பம்பாயிலிருப்பவர்கள் கூப்பிடுகிறார்கள். கல்கத்தாவிலிருப் பவர்கள் கூப்பிடுவார்கள். 'ஐயா... நீங்கள் நிறையக். கற்றவர்கள் என்று கேள்விப்பட்டோம். நீங்கள் கற்று அனுபவிக்கிற இன்பத்தை எல்லாம் எங்களுக்கும் கொடுங்கள்' என்று கற்றவர்களைத்தான் கூப்பிடுகிறார்கள், நன்றாகச் சாப்பிட்டவனைக் கூப்பிட மாட்டார்கள்.

ஒருவன் தனியாகச் சாப்பிட்டுவிட்டு மற்றொருவனிடம் வந்து வகை, வகையாகச் சாப்பிட்டதையெல்லாம் சொன்னால் கேட்கிறவனுக்குக் கோபம் வரும். இவன் தனியாக முழுங்கினதுமில்லாமல் நம்மிடம் வேறு சொல்ல வந்துட்டார்ன்னு கோபித்துக் கொள்வார்கள்.

அதனால் தான் திருவள்ளுவர், “நீ தனியாக அனுபவிக்கிற இன்பம் வேறு, எல்லாருடனும் சேர்ந்து கலந்து மகிழும் இன்பம் வேறு' என்றார். கற்றவர்கள் தாம் கற்றவையெல்லாம் பிறருக்குச் சொல்ல வேண்டும். ஏனென்றால் கல்வி ஒன்று தான் பிறருக்குச் சொல்ல, சொல்ல கொடுக்கக். கொடுக்க வளரும். பணம் கொடுக்கக்கொடுக்கக் குறையும். அதனால் தான் ஒருவன் பணத்தை இன்னொருவனுக்குக். கொடுத்தால், 'திருப்பிக் கொடு' என்று கேட்கிறான்.