பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

ஏன் என்றால் அது குறைந்திருக்கிறது. மடியிலே ஒருவர் நாறு ரூபாய் வைத்திருக்கிறார். அவரிடம் பணம் கேட்கிறோம். முப்பது ரூபாய் கொடுக்கிறார். மடியிலே மீதி எழுபது ரூபாய் தான் இருக்கும். ஆகையினாலே தான் 'முப்பது ரூபாயைத் திருப்பிக் கொடு... கணக்கில குறையுது' என்று கேட்கிறார், பணம் கொடுக்கக் கொடுக்க குறையும். கல்வி அப்படியல்ல. கொடுக்கக் கொடுக்க வளரும்.

ஆசிரியர்

ஓர் ஆசிரியர் பையன்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். அவர்களையெல்லாம் பத்தாம் வகுப்பு; பதினோராம் வகுப்பு, என்று படித்து வெற்றிபெற்றார்கள். பிறகு இந்த ஆசிரியர் என்ன செய்வார்? அவர்களுக்கெல்லாம் வாழ்த்து கூறி ஆசீர்வாதம் செய்து, 'நீங்கள் எல்லாம் மேலே நல்லா படித்து. காலேஜிலே கெட்டிக்காரன்னு பேர் வாங்குங்கடா' என்று சொல்லித்தான் அனுப்புவாரே யல்லாமல், அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் திருப்பியா கேட்பார்?

என்னிடமிருந்த கல்வியெல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டேன்.... எல்லாக் கல்வியையும் நீங்கள் எடுத்துக்கிட்டுப் போயிட்டா அடுத்தவங்களுக்கு நான் எப்படிச் சொல்லிக் கொடுப்பேன்? நான் சொல்லிக் கொடுத்த கல்வியை எல்லாம் திருப்பிக் கொடுங்கடா" என்றா கேட்பார்? கேட்க மாட்டார். ஏன் கல்வியானது கொடுக்கக் கொடுக்க வளரும். பணம் தான் கொடுக்கக் கொடுக்கக் குறையும்,