பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

இருக்கிறதே, அதை இந்த மழலைச் சொற்களுக்கு உவமை யாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.

தான் பெற்ற பிள்ளைகள் பேசுகிற மழலைச் சொற் களைக் கேட்காதவர்கள்தான், அந்த மழலைச் சொற்களைக் கேட்டு இன்பம் அனுபவிக்காதவர்கள்தான், குழலினால் வரக்கூடிய இன்பத்தையும், யாழினால் வரக் கூடிய இன்பத்தையும் சிறந்தது என்று சொல்லுவார்கள், ஆனால் தம்முடைய மக்களுடைய மழலைச் சொற்களைக் கேட்டு அனுபவிக்கிறவர்கள், குழலும் யாழும் இனிமை என்று சொல்லமாட்டார்கள் என்று சொல்கிறார்,

நுட்பம் உண்டு

இதில் ஒரு பெரிய நுட்பத்தினை வள்ளுவர் வைக்கிறார். 'குழலும் யாழும் இனிமையான நாதத்தை உண்டாக்கும். உண்மைதான்... ஆனால் இந்தக் குழலும் யாழும் கேட்கிறதுக்குத்தான் இனிமை; ஆனால், பார்ப்பதற்கு இனிமையாக இருக்காது. குழல் வாசிக்கின்றவர் முகத்தையும் யாழ் வாசிக்கின்றவர் முகத்தையும் பார்த்தால் சில நேரத்தில் நமக்கே பரிதாபமாக இருக்கும், சில நேரத்திலே வெறுப்பாகக்கூட இருக்கும். முகம் எப்படி இருந்தாலும் அவரது வாசிப்பிலே நாதம் நன்றாக இருக்கும்.

“குழலினிது, யாழினிது' என்று சொன்னதன் பொருள், அவை கேட்பதற்குத்தான் இனிமையைக் கொடுக்கும். ஆனால் பார்ப்பதற்கு அவை இனிமையாக இருக்காது. ஆனால், குழந்தைகள் பார்ப்பதற்கும் இனிமை, கேட்பதற்கு இனிமை... அதனால், குழலினிது யாழினிது என்ப.' இந்தச் சிறப்பினைச் சிந்திக்கவேண்டும்.

தொலை தூரம்

இன்னொன்றையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குழலும் யாழும் வாசிக்கிறபோது இனிமையான நாதத்தை உண்டாக்கும். ஆனால் இவற்றைப் பக்கத்தி