பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

லிருந்து கேட்கக் கூடாது. சற்று தூரத்தில் கேட்க வேண்டும். சில நேரத்திலே எங்கேயோ போய்க் கொண்டிருப்போம், யாரோ வாசிக்கும் புல்லாங்குழல் ஓசை நமக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கும். நம்முடைய காதில் அந்த நாதம் இனிமையாக விழுந்துகொண்டேயிருக்கும். எங்கேயோ வீணை வாசித்துக் கொண்டிருப்பார்கள். அது தொலை தூரத்தில் நம்முடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இது தான் இனிமையைக் கொடுக்கும்.

நம் புராணங்களில் கூடப் படிப்போம். மரத்தின்மீது உட்கார்ந்து கொண்டு 'கிருஷ்ண பகவான் புல்லாங்குழல் வாசித்தார், எங்கேயோ இருந்த பசுக்கள் எல்லாம் அப்படியே மயங்கியிருந்தன' என்று, எங்கேயோ புல்லாங்குழல் வாசிக்க வேண்டும். அதை நாம் தொலை தூரத்திலேயிருந்து கேட்க வேண்டும். அப்போது தான் இனிமை.

ஆனால், குழந்தைகள் அப்படியல்ல. மழலைச் சொற்கள் அருகில் கேட்பதற்கும் இனிமை. குழந்தையை முகத்தோடு முகம் அருகில் வைத்துக் கொண்டு பார்ப்பதற்கும் இனிமை. அதனால்தான் 'குழலினது யாழினது என்ப' என்றார்.


நாடாளுமன்றத்தில்

நான் நாடாளுமன்ற உறுப்பினராகி முதல் கூட்டத் தொடருக்குப் போய் பதினைந்து நாட்கள் கூட ஆகியிருக்காது ...அப்போது 'ஜவஹர்லால்' நேரு தான் பிரதமர். “மௌலங்கர்' சபா நாயகராக இருந்தார். அனந்தசயனம் ஐயங்கார் துணை சபாநாயகராக இருந்தார். பெரிய பெரிய ஆசாமிகளெல்லாம் எம்.பி.,க்களாகவும் அமைச்சர்களாகவுமிருந்த நேரம்.