பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஒரு நாள் நாடாளுமன்றத்திலே 'ரயில்வே' பட்ஜெட் வந்தது. பட்ஜெட் விவாதத்திலே தான் பேசினேன். நாடாளுமன்றத்திற்கு நான் புதுசா போயிருந்தாலும்கூட... பயமோ, தயக்கமோ எதுவுமே என்னிடம் கிடையாது . ஏனென்றால் தமிழ் நாட்டிலே பல ஆண்டுகளாகப் பேசிக்: கொண்டே வருவதால், மேடை எனக்கு மிகவும் பழகிப் போன செய்தி.

அனந்தசயனம் அய்யங்கார் சபைக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தார். அய்யங்கார் ரொம்பவும் கெட்டிக்காரர். அவர் கவர்னராகக்கூட இருந்திருக்கிறார், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர். 'சமஸ்கிருதத்திலே' பெரிய மேதை. தமிழிலேயும் நன்றாகப் பேசுவார். என்னிடத்திலே வீட்டிலே அடிக்கடி தமிழிலே பேசிக் கொண்டிருப்பார்.

சமஸ்கிருதத்திலேயிருந்து பெரிய செய்திகளை எல்லாம் எனக்கு எடுத்துச் சொல்வார். கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய எல்லா மொழிகளும் தெரிந்த பன்மொழிப் புலவராகவே இருந்தார் அவர். எளிமையாகப் பழகுவார். எல்லார்க்கும் தன்னாலியன்ற உதவியைச் செய்வார்.

அறிக்கைகள்

'பட்ஜெட்' விவாதம் தொடங்குவதற்கு முன்பே ரயில்வே அமைச்சகத்திலிருந்து உறுப்பினர்களுக்குப் பெரிய பெரிய அறிக்கைகளைக் கொடுத்திருந்தார்கள். அது தான் வழக்கம், அந்த அறிக்கைகளை அநேகமாக யாரும் படிக்க மாட்டார்கள்! இருந்தாலும் அவைகளை நான் முழுவதும் படித்துப் பார்க்கிற பழக்கம் வைத்திருந்தேன்.

நான் பேசும்போது, ரயில்வே தொழிலாளர்களுக்கு: என்னாலான வரைக்கும் ஏதோ சிறிய சேவை செய்திருக் கின்றேன், அவர்கள் சங்கடங்களை நான் அறிவேன், குறிப்பாக "லோகோ ஷெட்டில் இரவும் பகலுமாக,