பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

உடனே அனந்தசயனம் அய்யங்கார் என்னைப் பார்த்து (ஆங்கிலத்தில்) 'இந்த உறுப்பினர் திருமணம் ஆகாதவரா' என்று கேட்க, சட்டென்று நான் 'சபா நாயகருக்கு அவ்வளவு ஏன் அக்கறை' என்று திருப்பிக் கேட்டேன். உடனே சபையில் அனைவரும் 'ஓ' என்று சிரித்து விட்டார்கள். ஏன் என்றால் கல்யாண வயதில் அய்யங்காருக்கு அப்போது பெண்கள் இருந்தார்கள்.

வங்காளப் பேராசிரியர்

ஒரு சமயம் நாடாளுமன்றத்தில், வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் 'ரயில்வே பட்ஜெட்டில்' பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு காலேஜ் புரொபசர், உயரமானவர், வயதானவர், ஆங்கிலம் மிக நன்றாகப் பேசுவார். அவர் பக்கத்தில் கேரளத்திலிருந்து வந்திருந்த ஓர் அம்மையார் அமர்ந்திருந்தார். அவரும் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசக் கூடியவர்.

புரொபசர் 'அப்பர் பெர்த், லோயர் பெர்த்' தைப் பற்றிப் பேசும் போது "அப்பர் பெர்த் எல்லாம் நல்ல பலமாக இருக்கணும், உடம்பு கொஞ்சம் கனமா இருக்கிறவர்கள் மேலே படுத்தால் கீழே படுக்கிறவங்களுக்குப் பயமாயிருக்கும்..... உதாரணமாக என் பக்கத்தில் இருக்கும் மதிப்பிற்குரிய உறுப்பினர் 'அப்பர் பெர்த்லே' ஏறிப் படுத்தால் என்ன ஆவது? என்று நகைச்சுவையாகப் பேசி விட்டார். மன்றமே ஒரேயடியாகச் சிரித்து விட்டது. அம்மையாருக்குக் கோபம் வந்து, 'உங்கள் வேலையைப் பாருங்கள்' Mind your Business. என்று சத்தம் போட்டார்கள். உடனே புரொபசர், This is my business' என்றார். மன்றத்தில் மறுபடியும் பலத்த சிரிப்பு.