உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கலப்புத் திருமணமா?

இருபது ஆண்டுகட்கு முன்னால் கல்லூரி இலக்கியக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக நான் ஈரோட்டிற்குப் போயிருந்தேன். இலக்கியக் கூட்டம் மாலை ஐந்து மணிக்கு முடிந்து விட்டது. ரயிலுக்கு, நிறைய நேரம் இருந்தது. அதற்குள்ளே தந்தை பெரியாரைப் பார்த்து வணக்கம் சொல்லி விட்டுப் போகலாமே என்று அங்கே இருந்து பேராசிரியரிடம் 'பெரியார் ஊரில் இருக்காரா?' என்று கேட்டேன்.. ஊரில்தான் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தந்தை பெரியார்

பெரியார் வீட்டிற்குப் போனோம். மாலை ஆறு மணி இருக்கும், பேராசிரியர் உள்ளே போய், "திருக்குறள் முனிசாமி வந்திருக்கார் என்று சொன்னார். உடனே பெரியார், வாங்க...வாங்க...' என்று வரவேற்றார். அது பெரியாரிடத்திலே இருந்த உயர்ந்த நல்ல பழக்கங்களில் ஒன்று.

சின்னப் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களை எழுந்து நின்று வரவேற்று உபசரிக்கிற முறை இருக்கிறதே அது பெரியாரிடத்திலே இருந்தது போல வேறு யாரிடத்திலும் நான் பார்த்ததில்லை. அவர் கருத்து, அவர் கொள்கை, அவரது குறிக்கோள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அவரிடம் இருந்த 'உபசரிக்கும் பண்பு' உயர்ந்த மனிதத் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

அடிக்கடி பெரியார் சொல்வார். உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நீ ஆசைப்