பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

படுகிறாயோ அதே மாதிரி மற்றவர்களை நீ நடத்துவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று.

நான் வணக்கம் சொல்லிவிட்டு, பெரியார் முன் உட்கார்ந்தேன். "எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டார். "கல்லூரி இலக்கிய மன்றச் சொற்பொழிவுக்காக வந்திருக்கிறேன்" என்றேன்.

திருமணப் பத்திரிகை

நாங்கள் பேசிக் கொண்டேயிருந்தபோது கரூரிலிருந்து ஒருவர் ஒரு 'கல்யாணப் பத்திரிகை' கொண்டு வந்து பெரியாரிடம் நீட்டினார். 'சரி... சரி...' என்று கூறியபடிப் பெரியார் அந்தப் பத்திரிகையைக் கையில் வாங்கி கொண்டார். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. எழுத்து சரியாகத் தெரியவில்லை. கல்யாணப் பத்திரிகையை என்னிடம் கொடுத்து, 'இதைக் கொஞ்சம் படியுங்க' என்றார் பெரியார்.

நான் உறையிலிருந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்த்து, முதலில் 'தந்தை பெரியார் தலைமையில் சீர்திருத்தத் திருமணம்' னு படித்தேன். உடனே என்னை பெரியார் முறைச்சுப் பார்த்து, கொஞ்சம் இருங்கன்னார். "என்ன ஐயா..," என்று கேட்டேன். "இவங்களுக்கு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இன்றும் புத்தி வரலியே என்று வருத்தப்பட்டுக் கொண்டார், “ஏன் ஐயா, இப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டேன்.

சீர்திருத்தம்

"சீர்திருத்த 'திருமணம்' னு போட்டிருக்காங்களே. இது முட்டாள் தனம் இல்லியா?" என்றார். 'இதில் என்னங்க முட்டாள் தனம் இருக்கு? சீர்திருத்த