பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தாடிப் பெரியார்

பெரியார் பேசும்போது, அநேக ஆழ்ந்த, புதுமையான கருத்துக்களை ரொம்ப நகைச்சுவையுடன் கூறுவார். முப்பது, நாற்பது ஆண்டுகட்கு முன்னே ஒரு சமயம். பெரியார் சீர்காழிக்கு வந்திருந்தார். அப்போது ஒருவர் பெரியாரிடம் வந்து, “நீங்க ஏன் தாடி வளர்த்திருக்கிறீங்க? என்று கேட்டார். உடனே பக்கத்திலிருந்த: நாங்களெல்லாம், 'பெரியார் என்ன பதில் சொல்லப். போகிறாறோ?' என்று ஆர்வத்துடன் கவனித்துக்: கொண்டிருந்தோம். அப்போது நயா பைசா வராத நேரம், ஓரணா, அறையணா புழங்கிக் கொண்டிருந்த காலம்.

பெரியார், உடனே அந்த ஆசாமியைப் பார்த்து,. “நான் தாடி வளர்க்கறதனாலே யாருக்கும் ஒரு 'கஷ்டமும்' இல்லேன்னு நினைக்கிறேன். அப்படி. ஒரு வேளை நான் தாடி வளர்க்கிறதனாலே உனக்கு ஒரு இரண்டணா வருமானம் குறைந்து போச்சுண்ணா, இந்தா இரண்டணா வாங்கிட்டுப் போ...ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்ல, கேள்வி கேட்ட அந்த ஆசாமியும் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

கொடிகள்

சாதாரணமாக ஆண்களைவிடப் பெண்களே அழகாக.. இருப்பதாகச் சொல்கிறார்கள். பெண்களைக் 'கொடி' என்று பேசுகிறார்கள்.... நான் ஒரு நண்பரிடம் 'பெண்களை ஏன் கொடி என்கிறோம்? என்று கேட்டேன்... "பெண் கள்' ஒல்லியாக ' மென்மையாக இருக்கிறார்கள்...அதனாலே 'கொடி' என்று சொல்லுகிறோம் என்றார் அவர். "சில பேர் குண்டாக இருக்கிறார்களே, அவர்களையும் கொடி.: என்றே அழைக்கலாமா?, என்று கேட்டேன். "ஒன்று இரண்டு கொடி, அப்படித்தான் இருக்கும்" என்றார் அவர்.