பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

நான் "பல கொடிகள் அப்படித் தானே இருக்சிகன்றன? என்று சொன்னதும், அவர் சிரித்தார். பிறகு நான் சொன்னேன்... 'கொடி' என்பது மென்மையைக் குறிப்பதற்கு அல்ல. கொடி தனித்து இருக்காது. சில கொடிகள் தரையிலே படரும். சில கொடிகள் மரத்திலோ, அல்லது ஒரு கொம்பிலோ சுற்றிக்கொண்டு படரும். பெண்கள் ஓர் ஆடவனைச் சுற்றித் தழுவிக் கொண்டு வாழவேண்டும். நடைமுறையில் கொடிகளைத் தாங்கும் ‘கொம்பு.' என்று சொல்வார்கள். அதாவது அவன் பலமாக, உறுதியாக இருப்பான், உழைத்து நிறைய பணம் சம்பாதிப்பான், பெண் கொடியானது அவனைச் சுற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தும் என்று சொல்வார்கள்.

இது பழங்காலத்துப் பேச்சு... இப்போது அப்படியில்லை, அநேக இடங்களில் 'கொடி' சம்பாதிக்கிறது..., கொம்பு சும்மா இருக்கிறது, கொம்பிடம் “என்ன செய்கிறாய்?' என்று கேட்டால், 'கொடியைச் சுத்திக்கிட்டு இருக்கேன்' என்கிறது. இதுவே அதற்கொரு வேலையாய்ப் போய்விட்டது!


சிலைகளும் புள்ளிகளும்

முன்பு ஒரு முறை பெருந்தலைவர் காமராஜரும், சி. சுப்பிரமணியமும் கடலூரிலே ஒரு பெரிய கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். இளைஞர் காங்கிரஸ் கூட்டம். குமரி - அனந்தன் தான் அந்தக் கூட்டத்தை முன்னின்று . நடத்தியவர் என்று எனக்கு ஞாபகம். அந்தப் பெருங் கூட்டத்தில் நானும் பேசினேன்.

சிலை வைக்கும் வழக்கம் எங்கும் உண்டு. ஆனால், அதை ஓரிடத்திலோ இரண்டு...இடங்களிலோ வைத்தால் தான் அழகு. ஊர் முழுக்கக் கண்ட கண்ட இடங்களிசி. க. ----11