பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

லெல்லாம் சிலையை வைக்கிறார்கள். ஊர் முழுவதும் சிலையை வைத்துக் கொண்டிருந்தால் அது ஓர் அடையாளம் என்று ஆகாமல், நகைப்பிற்கிடமாகி விடும்.

சலவைத் தொழிலாளர்கிட்டே, ஒரு வேட்டியைச் சலவைக்குப் போட்டால், அவர் வேட்டியின் ஒரு மூலையில் ஒரு புள்ளி வைப்பார். இது ஒரு அடையாளத்திற்காகத்தான்... இந்த அடையாளப் புள்ளியை வேட்டி, முழுக்க யாராவது வைப்பார்களா? “என்னப்பா வேட்டி முழுக்க புள்ளி வைக்கிறாயே' ன்னு கேட்டால், “இது மிகவும் விலை உயர்ந்த வேட்டி...அதனாலே பத்திரமா பார்த்துக்கணும்னு வேட்டி முழுவதும் வைத்தேன் . சலவை செய்பவர் சொன்னா நமக்குக் கோபம் வருமா? வராதா? என்று பேசினேன், இதைக் கேட்டு நமது பெருந்தலைவர் உரக்கச் சிரிச்சிட்டாரு... காமராஜ் சிரிக்கிறார் என்றால் அது சாதாரணமானதா?

கலைவாணர்

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், எந்த மனிதர் கள்ளங்கபடமில்லாதவர்களாய், மனத்தால் தூய்மையாய் இருக்கிறாரோ அவர்தான் மனம் விட்டுச் சிரிப்பார்.... வஞ்சகனுக்கும் உள்ளத்தை ஒரு மாதிரி குறுகுறு என்று வைத்திருக்கிறவனுக்கும் அதிகமாக மனம் திறந்த சிரிப்பு வராது என்று ஒருமுறை கூறினார். எவ்வளவு பெரிய உண்மை.

சொல்கிற கருத்துக்களை எளிமையாகச் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்வதற்குத்தானே படித்த அறிவாளிகளையும் புலவர்களையும் பேசுவதற்கு அழைக்கிறோம், அவர்கள் முப்பது வருஷங்கள் படித்ததை நமக்கு முப்பது நிமிஷத்திலேயே எளிமையாகவும் சுருக்கமாகவும் சொல்ல வேண்டும். "இது நான் முப்பது ஆண்டுகள் படித்த செய்தி. ஆகையால் நீங்கள் முப்பது நாளாவது கேளுங்கள், என்று சொல்லக்கூடாது. .