பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

கீரை

உதாரணமாக, காலையில் 'மார்க்கெட்டிற்குப்' போய் கீரை வாங்கி வருகிறோம். நிறைய வாங்கிய கீரையை மனைவியிடம் கொடுக்கிறோம். அந்த அம்மாள் அந்தக் கீரையை அரிந்து எடுத்து, அதை நீரிலே கழுவி வேகவைத்துக் கடைந்து கொஞ்சமா, ஒரு கரண்டியிலே எடுத்துக்கொண்டு வந்து இலையிலே சாப்பிட வைக்கிறாள். நாம் வாங்கி வரும்போது கீரை கிட்டத் தட்ட ஒரு குண்டான் நிறைய இருந்தது. ஆனால், மனைவி வைத்தது ஒரு கிண்ணம் அளவுதான்.

அப்படியில்லாமல் அந்த மனைவி இலையைப் போட்டு,

“காலையில் நீங்கள் வாங்கி வந்த கீரையைக் கொண்டு வந்து வைக்கிறேன்” அப்படியே பச்சைக்கீரை முழுவதையும் கொண்டுவந்து வைத்தால் அப்புறம் இவள் எதற்கு? அறிஞர்கள் தாங்கள் படித்த ஆயிரக் கணக்கான நூல்களை எல்லாம் கடைந்தெடுத்து நமக்குக் கொஞ்சமாகவும் அதே நேரம் ஜீரணம் ஆகக் கூடியதாகவும் கொடுக்க வேண்டும்.

ரிஷிகேசம்

நான் 1952-லிருந்து 57 வரைக்கும் 'லோக் சபா' உறுப்பினராக இருந்தபோது அடிக்கடி 'ரிஷிகேசம்' சிவானந்தர் ஆசிரமத்துக்குப் போய்விடுவேன். 'டேராடூன் எக்ஸ்ப்ரஸில், புறப்பட்டுப் போய் காலையில் ஏழு மணிக்கு 'ஹரித்வாரில்' இறங்கி ரிஷிகேசம் போகணும். இறங்கியவுடனே அங்கேயிருக்கிற : 'டோங்கா', வாலாக்கள் என்னைப் பார்ப்பார்கள், நான் அடிக்கடி வருவதைப் பார்த்துப் பழக்கப்பட்ட அவர்கள், 'என் வண்டியிலே வாங்க'ன்னு கூப்பிடுவார்கள். நம்ம ஊரில் ஒரு பழகிப் போன வண்டிக்காரன் நம்மைக் கூப்பிடுகிற மாதிரி அங்கிருக்கிறவன்' 'புராண ஆத்மி,' ' புராண ஆத்மி,