பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஆயியே...' என்று கூப்பிடுவான். 'நான் பழைய ஆள்... வேற யார்கிட்டேயும் போகாதீங்க'ன்னு கூப்பிடுவான். ஓ...நீ புராண ஆத்மியா...? நானும் புராண ஆத்மி தான் என்று அவன் வண்டியில் தான் உட்கார்ந்து யோவேன்.

பட்டம்

ஒரு தட68)61 சுவாமி சிவானந்தர் எனக்கரக பூஜை, யாகம் எல்லாம் செய்து 'திருக்குறள் கேசரி' என்கிற பட்டத்தைக் கொடுத்தார், அவர் என்னிடம் மிகவும் பிரியமாக இருப்பார். 'முனுசாமிஜி' என்றுதான் கூப்பிடுவார். 'இந்த கங்கைத் தண்ணில போய்க் குளிக்காதீங்க....ஜலம் ஐஸ் மாதிரி இருக்கும். உங்களுக்கு வெந்நீர் வைத்துக் கொடுக்கச் சொல்லியிருக்கேன். வெந்நீரிலேயே குளிங்க, கங்கைத் தண்ணி உங்களுக்கு ஒத்துக்காது' என்று சொல்வார். அங்கு தமிழ்நாட்டு மக்கள் நிறைய வருவார்கள். அதற்காக என்னை அங்கே அடிக்கடி பிரசங்கம் பண்ணச் சொல்வார்.

ஆலயங்களுக்குச் செல்லுதல்

ஒரு தடவை பிரசங்கத்திலே ஒரு கருத்தைச் சொன்னேன். "பெரிய மகான் ஒருவர் 'ஆலயங்களுக்குப் போய் தெய்வ வழிபாடு நடத்துங்கள்; உங்கள் பாவங்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாம் போகும். இன்பம் வரும்' என்று சொன்னார். ஒருத்தர் சரி தான்னு சொல்லி ஒரு ரெண்டு, மூணு மாசம் ஆலயத்துக்குப் போய் பார்த்துவிட்டு வந்து, 'ஒண்ணும் தெரியலீங்களே... நீங்க சொன்னீங்களேன்னு நான் இத்தனை மாசமா சுத்தி சுத்திப் பார்த்தேன். ஒண்ணும் ஆகலியே'ன்னு சொன்னார் . அதற்கு மகான், 'மூணு நாலு மாசத்திலே உனக்குப் பயன் வந்துடுமா? அதுக்குள்ளேயா. நீ செய்த பாவமெல்லாம் தொலைஞ்சிடும்?' என்று கேட்டாராம்.